வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி டிசம்பர் மாதம் தான்; ஜனவரியில் அல்ல! மலேசிய இந்து சங்கம் விளக்கம்

ஜனவரி 20, 2020-

சனிப்பெயர்ச்சி இவ்வருட இறுதியில் அதாவது 27.12.2020ஆம் தேதி தான் நடைபெறுகிறது என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது. இது தற்போது கடைப்பிடித்து வரும் பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட பல்வேறு பஞ்சாங்க ரீதியிலான விஷயங்களை பழங்காலமாக இந்து ஆலயங்களில் வாய் வழியாக சொல்லப்பட்டு வரும் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கிய பஞ்சாங்கம் காஞ்சி மடத்தினால் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில், எதிர்வரும் சுபமங்கள சார்வரி வருடம், மார்கழி மாதம் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (27.12.2020ஆம் தேதி) நிகழும் சனிப்பெயர்ச்சி தினமே சாலச் சிறந்ததாகவும் சரியானதாகவும் மற்றும் முறையானதாகவும் இருப்பதால் மலேசியாவில் இத்தேதியை பின்பற்றுவதே சிறப்பாகும். இப்பெயர்ச்சியில் சனீஸ்வர பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

நன்றி. திருச்சிற்றம்பலம்.

You may also like...