Category: Government and International Liasons

0

தமிழும் இந்து சமயமும் ஒருங்கே வளர்ந்த தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை ஒழிக்க மாநாடா?

05 செப்டம்பர் 2023- உலகிற்கே இந்து சமயம் எனும் ஆதியும் அந்தமும் இல்லாத சனாதன தர்மத்தைப் போதித்த தமிழ்நாட்டில் அதே தர்மத்தை ஒழிக்க வேண்டும் என ஆட்சியில் இருக்கும் அரசின் அமைச்சர் பொறுப்பில் இருப்பவரின் தலைமையில் மாநாடு நடத்தப்படுவது கண்டு மலேசிய இந்து சங்கம் வருத்தம் கொள்வதோடு...

மலேசியாவிற்கான இந்திய தூதருடன் மலேசிய இந்து சங்கம் சந்திப்பு

7 ஆகஸ்டு 2023- மலேசிய இந்துக்கள் பயன் பெறும் விவகாரங்கள் குறித்து பேசவும் மற்றும் இங்குள்ள இந்தியர்களின் ஆணி வேரான இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளவும் தலைநகரில் உள்ள மலேசியாவிற்கான இந்திய தூதருடன் மலேசிய இந்து சங்கத்தினர் சந்திப்பு கூட்டம் நடத்தினர். கடந்த 04.08.2023 வெள்ளிக்கிழமை, இந்திய...

மலேசியாவில் திராவிட மாடல் பற்றிய கருத்தரங்கு எதற்கு?

10 பிப்ரவரி 2023- தமிழ்நாட்டின் திராவிட மாடல் பற்றிய கருத்தரங்கை நம் நாட்டில் நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? அதிலும் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இந்த கருத்தரங்கு நடத்துவதன் நோக்கம் என்ன என மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க....

துருக்கி – சிரிய மக்களின் மீட்சிக்காக இந்து வழிபாட்டு தலங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனை

09 பிப்ரவரி 2023 கடந்த திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா நாடுகளில் பல்லாயிரக் கணக்கான மக்கள்  உயிர், உடல், உடைமைச் சேதத்திற்கு ஆளாகி பெருந்துயரை எதிர்கொண்டு வருகின்றனர். அவ்விரு நாடுகளைச் சேர்ந்த மக்களின் மீட்சிக்காக மலேசியாவில் உள்ள இந்து வழிபாட்டு தலங்களில் பிப்ரவரி...

தேசிய கல்வி ஆலோசனை மன்றம்: இந்தியர் பிரதிநிதித்துவம் இல்லை

20 ஜனவரி 2023- தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் மலேசிய இந்திய சமுதாயத்தின் சார்பில் ஒருவரும் நியமிக்கப்படாதது குறித்து மலேசிய இந்து சங்கம் ஆதங்கமும் வேதனையும் கொள்கிறது என்று அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ சங்கபூசன் தங்க. கணேசன் தெரிவித்துள்ளார். மாணவர் எண்ணிக்கைக் குறைவால் அதிகமான...

ஜொகூரில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு பொங்கலுக்கு சிறப்பு விடுமுறை இல்லையா? இந்து சங்கம் கேள்வி

12.01.2023- எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 15ஆம் தேதி தமிழர்கள் அனைவரும் பொங்கல் கொண்டாடவிருக்கும் நிலையில், ஜொகூரில் உள்ள தமிழர்களுக்கு குறிப்பாக தமிழ்ப்பள்ளிக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படாதது ஏன் என்று மலேசிய இந்து சங்கம் கேள்வி எழுப்புகிறது. தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள். இறைவனுக்கும் இயற்கைக்கும்...

தொழில்முனைவோர் துணை அமைச்சருடன் சந்திப்பு; இந்து சங்கத்திற்கு புது நம்பிக்கை அளிக்கிறது

07 ஜனவரி 2023- புத்தாண்டு மலர்ந்துள்ள நிலையில், புதிய அரசின் தொழில்முனைவோர்-கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியை மலேசிய இந்து சங்க மத்தியப் பேரவைப் பொறுப்பாளர்கள் அண்மையில் சந்தித்ததும் இந்து சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளுக்கு துணை அமைச்சர் ஆதரவு அளித்ததும் புது நம்பிக்கை அளிப்பதாக...

உள்நாட்டு நாதஸ்வர மேள இசைக் கலைஞர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்

16 டிசம்பர் 2022- இந்து வழிபாட்டு தலங்களில் உள்நாட்டு நாதஸ்வர, மேள இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதில் ஆலய நிருவாகத்தினர் அக்கறைக் காட்ட வேண்டும் என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார். நாதஸ்வர, மேள இசைக்...