அஞ்சலி

காஞ்சி சங்கராச்சாரியார் மறைவு
மலேசிய இந்து சங்கத்தின் அஞ்சலி
மார்ச்- 1
காமகோடி பீடத்தின் 69-தாவது சங்கரச்சாரியார் ஜெயந்திரர்  தனது 82 வது வயதில் காலமானத்தையொட்டி மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் அதன் தேசிய தலைவர் டத்தோ ஆர்.எஸ் மோகன் ஷான் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொண்டார்.
காஞ்சி சங்கராச்சாரியாரின் மறைவு பெறும் வேதனை தரக்கூடிய விசயமாகும். தனது சமய தொண்டு, சேவை மற்றும் அளவிலா புலமையால் இந்து சமயத்தினரிடையே பெரும் செல்வாக்குப் பெற்றவர் இவர். தனது மிக சிறிய வயதிலேயே காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதியானார். காஞ்சிபுரத்தில் உள்ள ஆலயங்களை தரிசிக்க வரும் பக்தர்கள் காமகோடி பீடத்திற்கு சென்று சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசிப் பெற தவறியதில்லை. மேலும் இவர் பல சமூக சேவை முயற்சிகளில் தன்னை முன்படுத்திக் கொண்டார். ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக பல அமைப்புகளை தொடங்கியவர் சங்கராச்சாரியார் அவர்கள்..
சமயம் தொடர்பான பல சர்ச்சையான விவகாரங்களுக்கு தகுந்த விளக்கம் அளித்து அவற்றிக்கு தீர்வு காண உதவியவர் இவர். சுவாமிகளின் மறைவு இந்திய நாட்டு மக்களுக்கு மட்டும் அன்றி மலேசிய இந்து மக்களுக்கும் பெரிய இழப்பே ஆகும் என்று அவர் கூறினார்.
இந்த மண்ணிலகை விட்டு சித்தி அடைந்தாலும் சங்கராச்சாரியார் அவர்கள், தனது சமய அர்ப்பணிப்பு மற்றும் சமூக சேவைகள் மூலம் எண்ணிலடங்கா இந்து பக்தர்களின் மனத்தில் என்றும் நிலைத்து வாழ்வார் என்று டத்தோ ஆர்.எஸ் மோகன் ஷான் தெரிவித்தார்.
நன்றி.

தங்களின் சேவையை எதிர்பார்க்கும்,

ஸ்ரீ காசி டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் PMW., JMW., AMK.,BKM., PJK.
தேசியத் தலைவர்
மலேசிய இந்து சங்கம்