அட்சய திருதியை தானம் வழங்கும் நாளாக பிரகடணம்

அட்சய திருதியை தானம் வழங்கும் நாளாக பிரகடணம்ம

லேசிய இந்து சங்கம் அறிவிப்பு.

ஏப்ரல் 26-
வருகின்ற சித்திரை 16 (ஏப்ரல் 29) அன்று அட்சய திருதியை என்று அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நாளானது அனைவரும் தானம் வழங்கும் நாளாக பிரகடணப்படுத்தப்படுவதாக மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ் மோகன் ஷாண் அறிவித்தார்.
அட்சய திருதியை அன்று மக்கள் அனைவரும் நகை கடைகளில் குவிந்து இருப்பது நாம் நாட்டில் வழக்கமாக நிகழக்கூடிய சம்பவமாகும். ஆனால் அந்த நாளின் பலனை இந்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அது பகவான் பரசுராமன் அவதரித்த நாள். பஞ்சபாண்டவர்கள் சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்ற நாள் என்று புராணங்கள் கூருகின்றன. இது அன்ன பூரணி அவதரித்த நாளும் ஆகும்.
ஆகவே இன்றைய தினத்தில் மக்கள் தங்கள் இல்லங்களில் மகா லெச்சுமி பூஜை செய்வது தர்மம். வீட்டினை சுத்தம் செய்து வாசலில் மாக்கோலம் இட்டு நெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். லெச்சுமி தேவி படத்தை அலங்கரித்து நவதானியம் மற்றும் பச்சை காய்கறிகள் படைத்து பூஜை செய்ய வேண்டும். அன்றை தினம் ஏழை எளியவர்களுக்கு தங்களால் முடிந்த அளவிற்கு தானங்கள் செய்ய வேண்டும். இதுவே அட்சய திருதியையின் தர்ப்பரியம் ஆகும். மலேசிய இந்து சங்கத்தின் அட்சய பாத்திர திட்டம் நாட்டில் பல ஆலயங்களில் அமலில் இருக்கின்றன. தானம் வழங்க விரும்புகின்றவர்கள் அரிசி பருப்பு போன்ற அத்யாவசிய பொருட்களை அட்சய பாத்திர திட்டம்தனில் வழங்கலாம். மேலும் அன்றைய தினம் ஆலயங்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது சிறப்பு ஆகும்.
இந்நாளில் தங்கம் வாங்குவது தவறில்லை. மாறாக மக்கள் கடன் வாங்கி தங்க நகைகள் வாங்குவது சிறப்பு ஆகாது.. அன்றைய தினம் வாங்கப்படும் தங்கமானது குடும்பத்திற்கு சீர் கிடையாது. ஆகவே மக்கள் இயன்ற அளவிற்கு தான தர்மங்கள் குறைவிலா செய்வது சிறப்பு ஆகும். ஆகவே அட்சய திருதியை நாளின் பொருளுணர்ந்து முறையாக அனிசரித்து அதன் முழு பயனையும் அடையும்படி மலேசிய இந்து சங்கம் தனது பத்திரிக்கை செய்தியில் கேட்டுக் கொள்கிறது.

என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீ காசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW., JMW., AMK., BKM., PJK.
தேசியத் தலைவர்
மலேசிய இந்து சங்கம்

You may also like...