ஆலயக் குருக்கள் மற்றும் பணியாளர்களுக்கு சொக்சோ திட்டம்

24 ஆகஸ்டு 2021-

மலேசிய இந்து சங்கமும் தைப்பிங்கில் உள்ள சொக்சோ கிளை அலுவலகமும் இணைந்து நாட்டில் உள்ள ஆலயங்களில் பணிப்புரியும் குருக்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நிறுவனம் எனும் சொக்சோ பாதுகாப்பை வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆலயங்களில் பணிபுரியும் உள்நாட்டு, வெளிநாட்டு குருக்கள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் ஆலயப் பணியாளர்கள் இந்த சொக்சோ பாதுகாப்பு திட்டத்தில் அங்கத்தினராகி சொக்சோ சலுகைகளைப் பெற முடியும். மேலும், ஆலயத்தில் பணிபுரியாமல் சுயமாக குருக்களாக இருப்பவர்களும் இச்சலுகைகளைப் பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தற்போது தைப்பிங் சொக்சோ அலுவலக பணியாளர்கள் ஆலயங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைச் சேகரித்து வரும் நிலையில், ஆலயங்கள் அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்படி மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இதன் தொடர்பாக மலேசிய இந்து சங்கத்திற்கும் தைப்பிங் சொக்சோ கிளை அலுவலகத்திற்கும் இடையில் விரைவில் உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.