ஆலயங்களுக்கான கோவிட் கால அரசாங்க நிதி உதவி

02.02.2021 –

கோவிட்-19 பெருந்தொற்றால் விதிக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவினால் வருமானம் பாதிக்கப்பட்ட ஆலயங்களுக்கு உதவ மலேசிய இந்து சங்கம் அரசாங்கத்திடம் நிதி உதவி கோரியதை அடுத்து அரசாங்கம் நிதி உதவி வழங்க ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், இந்த உதவி தொகை திட்டத்தின் கீழ் 310 ஆலயங்களில் 219 ஆலயங்களுக்கு நிதியமைச்சு ஆலயத்தின் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தைச் செலுத்தியுள்ளது. மீத 91 ஆலயங்களுக்கான தெளிவான ஆர்.ஓ.எஸ் சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு நகலைத் திரட்டி வருகிறது.  மற்ற 1624 ஆலயங்களுக்கான நிதியை அரசாங்கம் மலேசிய இந்து சங்கத்திடம் வழங்கி ஆலயங்களுக்கு பகிர்ந்தளிக்கும்படி தெரிவித்துள்ளது. மலேசிய இந்து சங்கம் மாநில வாரியாக சென்று இந்த உதவி தொகையை வழங்கவுள்ளது.

இந்த உதவி தொகையை ஆலயத்தின் அடிப்படை தேவைகளான மின்சார கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்தவும் அன்றாட பூஜை உபயோக பொருட்களை வாங்கவும் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மாநில வாரியாக தேதி நிர்ணயிக்கப்பட்டு அன்றைய நாளில் இந்த உதவி தொகை ஆலயங்களுக்கு வழங்கப்படவுள்ளது. மாநில வாரியாக நிர்ணயிக்கப்பட்ட தேதி விவரம்:

மாநிலம்தேதி  
பேராக்06.02.2021 (தாப்பா – சத்குரு ஶ்ரீஜெகநாதர் சுவாமி ஆத்ம நிலையம்)
07.02.2021 (ஈப்போ – மாநில அலுவலகம்)
ஜொகூர்12.02.2021 (ஜொகூர் பாரு)
13.02.2021 (குளுவாங் – மாநில அலுவலகம்)
மலாக்கா14.02.2021 (மாநில அலுவலகம்)
விலாயா20.02.2021 (மாநில அலுவலகம்)
சிலாங்கூர்26.02.2021 (தலைமையகம், பெட்டாலிங் ஜெயா) 27.02.2021 (செமினி)
28.02.2021 (கிள்ளான் – மாநில அலுவலகம்)
கெடா06.03.2021 (சுங்கைபட்டாணி – மாநில அலுவலகம்)
பினாங்கு07.03.2021 (செபராங் பிறை – மாநில அலுவலகம்)
நெகிரி செம்பிலான்13.03.2021 (சிரம்பான் – மாநில அலுவலகம்) 14.03.2021 (பின்னர் அறிவிக்கப்படும்)
பகாங்27.03.2021 (குவாந்தான்)
28.03.2021 (மெந்தகாப்)

உதவி தொகையைப் பெற்றுக் கொள்ள, கட்டாயம் ஓர் ஆலயத்திலிருந்து தலைவர் மற்றும் பொருளாளர் அல்லது செயலாளர் என இருவர் (2) மட்டுமே கலந்து கொள்ள முடியும். கலந்து கொள்பவர் கட்டாயம் பின்வருவனவற்றை உடன் கொண்டு வர வேண்டும்:

  1. அசல் மைகார்டு அடையாள அட்டை & ஒரு நகல்;
  2. அசல் சங்க பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) சான்றிதழ் & தெளிவான ஒரு நகல்;
  3. அசல் வங்கி கணக்கு & தெளிவான ஒரு நகல் (சேமிப்பு அல்லது நடப்பு கணக்கு வைத்துள்ள ஆலயம் எனில்)
  4. அசல் மலேசிய இந்து சங்க பதிவு சான்றிதழ் (Life Member Temple) & தெளிவான ஒரு நகல் (மலேசிய இந்து சங்கத்தில் பதிவு பெற்ற ஆலயம் எனில்)
  5. நவம்பர் & டிசம்பர் 2020 அல்லது டிசம்பர் 2020 & ஜனவரி 2021 ஆகிய மாதங்களுக்கான ஆலய செலவு அசல் ரசீது & தெளிவான ஒரு நகல்
  6. ஆலயத்தின் அதிகாரப்பூர்வ முத்திரை (Rubber Stamp)

இவ்விவகாரத்தில் ஆலய நிர்வாகத்தின் ஒத்துழைப்பு மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட தேதி மற்றும் இடத்திற்கு வந்து உதவி தொகையை பெற்றுக் கொள்ள தயாராக இருக்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம். மேற்குறிப்பிட்ட 1-6 வரைக்குமான விசயங்களை உடன் கொண்டு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். மேல் விவரங்களுக்கு 03-7784 4668 என்ற தொலைப்பேசி எண்ணில் மலேசிய இந்து சங்க தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

You may also like...