ஆலயங்களுக்கான செயல்பாட்டு தர விதிமுறை

12.10.2020 –

தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை அரசாங்கம் பிறப்பித்துள்ளது. எனவே ஆலயங்களில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டு தர விதிமுறைகளை (எஸ்.ஓ.பி) மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்துகிறது.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள ஆலயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய எஸ்.ஓ.பி:

  1. நித்திய பூஜை
  2. ஆலயத்தில் நித்திய பூஜை (காலை – மாலை) மட்டுமே நடைப்பெற அனுமதி உண்டு. இதனை ஆலயக் குருக்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
  • பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
  • உத்தரவு காலம் முடியும் வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள ஆலயங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

மீண்டும் தலைத்தூக்கி இருக்கும் கோவிட்-19 நச்சில் பெருந்தொற்று பரவலை அனைவரும் இணைந்து கட்டுப்படுத்துவோம். நம் சிறு அலட்சியமும் நம் பாசத்திற்குரியவர்களின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம். பாதுகாப்போடு இருப்போம்.