ஆலயங்களை 12.02.2021 முதல் பொதுமக்களுக்கு திறக்க அனுமதி – மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு!

மலேசிய இந்து சங்கம் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் 12.02.2021 ஆம் தேதி முதல் ஆலயத்தைப் பொதுமக்களுக்கு திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நேரம்:

  1. காலை – காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை
  2. மாலை – மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

பக்தர்கள் எண்ணிக்கை மற்றும் பிற விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும்.

ஆலய நிர்வாகத்தினர் நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

என்றும் இறைச் சேவையில்,

ஸ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான்,
தேசியத் தலைவர்,
மலேசிய இந்து சங்கம்

You may also like...