ஆலயத்தையும் இந்து வழிப்பாட்டையும் இழிவுபடுத்தாதீர்!

Sri Kasi Datuk RS Mohan Shan

செப்டம்பர் 5-
ஆலயத்தில் தகாத செயல்களை நடைப்பெறுவதை கவனிக்கவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கும் ஆலய நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். சமீபத்தில் ஆலயத்தில் ஒரு புதுமண தம்பதியினர் தகாத முறையில் முத்தமிடும் காட்சி சமூக வலை தளத்தில் பரவலாக பரவிவருகின்றது. இது மிகவும் கண்டிக்கத்தக்க விசயமாகும். ஆலயம் என்பது இறைவனின் இல்லம். அத்தகைய புனிதமான தளத்தில் இத்தகைய தகாத நிகழ்வுகள் நிகழாமல் இருப்பதை ஆலய நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ் மோகன் ஷான் கேட்டுக் கொண்டார்.

அது மற்றும் இன்றி ஆலயத்தையும் தெய்வ திருவுருவத்தையும் பல பொறுத்தமில்லாத இடங்களில் வைத்து வழிப்பட்டு வந்த நமது சமுதாயம் தற்பொழுது குரு வழிப்பாடு என்ற பெயரில் கடை வீதி கட்டிடங்களில் வழிப்பாட்டுமையம் அனைத்து சமய நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தோம். தற்பொழுது அதனையும் விடுத்து வாகனங்களில் வழிப்பாட்டு மையங்களை அமைக்கக் கூடிய நிலையை நித்தியானந்தா வழிப்பாட்டு இயக்கம் உருவாக்கியுள்ளது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஆகமத்திற்கு ஒவ்வாத விசயம் ஆகும்.

இந்த நாட்டில் நித்தியானந்தா குரு வழிப்பாட்டு இயக்கம் பயிற்சிகள் என்ற பெயரில் பல தவறான முறைகளை கையாண்டு பணம் சம்பாதிப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். பல இளைஞர்களையும் யுவதிகளையும் பயிற்சி என்ற பெயரில் தமிழகத்திற்கு அனுப்பும் இவர்கள் அதற்கான கட்டணமாக 5000 அமெரிக்கா டாலர் முதல் 15000 அமெரிக்கா டாலர் வரை வசூலிக்கின்றனர் என்பது மலேசிய இந்து சங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற புகார் ஆகும். மேலும் அவ்வாறு பயிற்சியில் கலந்து கொள்ளும் இளைஞர்களையும் யுவதிகளையும் தங்கள் பக்கம் முழுமையாக வசப்படுத்தி அவர்களின் குடும்பத்தில் இருந்து பிரித்து அவர்களின் கல்வியை தொடரமுடியாமல் பலர் சிக்கி கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து நித்தியானந்தா வழிப்பாட்டு இயக்கத்தின் பதிவினை ரத்து செய்யும்படியும் அவர்களின் நடவடிக்கைகள் இந்த நாட்டில் தடை செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரையை உள்துறை அமைச்சுக்கும் காவல் இலாக்காவிற்கும் மலேசிய இந்து சங்கம் சமர்ப்பித்து இருக்கின்றது என்று டத்தோ ஆர்.எஸ் மோகன் ஷான் கூறினார்.. இந்து சமயத்தையும் தெய்வ உருவங்களையும் இழிவுபடுத்தக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான தக்க நடவடிக்கைகள் எடுப்பதில் மலேசிய இந்து சங்கம் தனது நிலைப்பாட்டை உறுதி செய்யும் என்பதையும் அவர் தனது பத்திரிக்கை செய்தி வழி தெளிவுபடுத்தினார்.

என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீ காசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW., JMW., AMK., BKM., PJK.
தேசியத் தலைவர்
மலேசிய இந்து சங்கம்

You may also like...