ஆலயம் திறக்கப்படுவது எப்போது?

16.06.2020 –

அனைவருக்கும் வணக்கம். இன்று காலையில் தலைமை செயலாளர் டத்தோ வான் சுராயா தலைமையில் நடைபெற்ற தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீண்டும் ஆலயங்களைத் திறப்பதற்கான செயல்பாட்டு தர விதிமுறைகள் (SOP) மற்றும் இதர விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்டபோது, புதிய செயல்பாட்டு தர விதிமுறை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அது விரைவில் தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் வழங்கப்படும் என்றும் அனுமதி கிடைத்த பிறகே பச்சை மற்றும் மஞ்சள் மண்டலங்களில் உள்ள ஆலயங்களைத் திறப்பதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் டத்தோ வான் சுராயா கூறினார். அதேவேளையில், ஆலயங்கள் மாநில அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் யாவும் முழுமை பெற இரண்டு வாரம் அல்லது அதற்கும் குறைவான காலம் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆலயங்கள், அடிப்படை செயல்பாட்டு தர விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் இந்த இரு வார காலக்கெடுவை ஆலயங்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆலயத்தில் திருமண பதிவு மற்றும் திருமண வைபவங்கள் ஆகியவை குறித்த விவரங்களும் புதிய செயல்பாட்டு தர விதிமுறையில் (SOP) இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டது. அதுவரையில், ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்ட 84 இந்து ஆலயங்கள் மட்டுமே வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை 6 முதல் இரவு 9 மணி வரை வழிப்பாட்டுக்கு திறந்திருக்கும் என தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.

என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK

தேசியத் தலைவர்,

மலேசிய இந்து சங்கம்

You may also like...