அக்டோபர் 11-
நாட்டில் உள்ள ஆலயங்களில் குருக்களாக பணியாற்றுபவர்கள் போதிய மற்றும் முறையான ஆவணங்களை வைத்திருப்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
சில நாட்களுக்கு முன்னர், பினாங்கில் உள்ள ஆலயத்தில் பணி புரிந்த குருக்கள் ஆறு பேர் முறையான குடிநுழைவு ஆவணங்கள் இல்லாத காரணத்தால் குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் குருக்கள் பற்றாக்குறையால் சில ஆலயங்கள் இந்தியாவிலிருந்து குருக்களை வரவழைப்பது வழக்கமானது தான். ஆனால், நாட்டின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு முறையான ஆவணங்களுடன் குருக்களை வரவழைப்பது மிக முக்கியமானதாகும்.
முழு நேரமாகவோ அல்லது விழாக் காலங்களின் போதோ அழைத்து வரப்படும் குருக்களின் விண்ணப்பங்களை ஆலயங்கள் முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும். குருக்கள் அழைத்து வந்த பிறகு அவர்களின் ஆவணங்களை ஆலய நிர்வாகங்கள் முறையாக பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
குருக்கள் தொடர்பான குடிநுழைவுத்துறை பற்றி ஐயங்கள் இருப்பின் ஆலயங்கள் உடனடியாக அருகில் இருக்கும் வட்டாரப் பேரவைகளையோ, மாநில பேரவைகளையோ அல்லது தலைமையகத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
என்றும் இறைச் சேவையில்,
ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க. கணேசன்
தேசியக் கௌ. பொதுச் செயலாளர் மலேசிய இந்து சங்கம்