இந்து அறப்பணி வாரியம் விவகாரம்- ஜூன் 17ஆம் தேதி ஆலயங்களுடன் சந்திப்பு கூட்டம்!

ஜூன் 9-  அண்மையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றத்தினைக் கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள ஆலயங்களைக் காக்க வேண்டி இந்து என்ற அடிப்படையில் நாம் ஒன்றிணைய வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். இதனைக் கருத்தில் கொண்டு, மலேசிய இந்து சங்கத்தின் கீழ் ஆலய வாரியம் அமைக்கவும் தற்போதைய அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்து அறப்பணி வாரியம் தொடர்பாக விவாதிக்கவும் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம்.

ஆலய சந்திப்பு கூட்டத்தின் விவரம்:

தேதி  : 17 ஜூன் 2018 (ஞாயிற்றுக்கிழமை)

       நேரம் : பிற்பகல் 2 மணிக்கு

       இடம் : மலேசிய இந்து சங்க தலைமையக அரங்கம், முதல் மாடி,

No.67, Jalan PJS  1/48, Taman Petaling Utama 7, Petaling Jaya, Selangor

இந்த சந்திப்புக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம். சந்திப்பில் உங்களால் கலந்து கொள்ள முடியவில்லை எனில் பிரதிநிதிகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். கூட்டத்திற்கு வரும்போது உடன் LMT ஆலய உறுப்பிய எண்ணையும் கொண்டு வரவும்.

ஜூன் 15 2018 முன்பாக 03-7784 4668 / 4669 அல்லது admin@malaysiahindusangam.org முன்பதிவு செய்யவும்.

You may also like...