இவ்வாண்டிற்கான (2020) 43வது தேசிய திருமுறை ஓதும் விழா ஒத்திவைப்பு

17.04.2020 –

கடந்த 16.04.2020ஆம் தேதி நடந்த, மலேசிய இந்து சங்க உச்சமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலின்படி, இவ்வாண்டு (2020) நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட வட்டார, மாநில மற்றும் தேசிய அளவிலான 43வது திருமுறை ஓதும் விழா அடுத்தாண்டுக்கு (2021) ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவிட் 19 நச்சில் நோய் தொற்றினால், அரசாங்கம் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு பிறப்பித்து அது இன்னமும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அரசாங்கம் அறிவித்த கூடல் இடைவெளியைக் கருத்தில் கொண்டும், உத்தரவு நீட்டிப்பு குறித்த உறுதியற்ற நிலை மற்றும் போட்டிக்கான முன்னேற்பாடுகளின் கால அவகாச தேவையைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாண்டு (2020) போட்டிக்காக வெளியிடப்பட்ட திருமுறை ஓதும் விழா பாடல் புத்தகம் மற்றும் குறுந்தட்டு ஆகியவைவே அடுத்த ஆண்டு (2021) போட்டியில் பயன்படுத்தப்படும் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

குறிப்பு: அரசாங்க கட்டுப்பாட்டு உத்தரவு காரணமாக மத்திய செயலவைக் கூட்டத்தை நடத்த இயலாத காரணத்தால், 16.04.2020ஆம் தேதி உச்சமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK

தேசியத் தலைவர், மலேசிய இந்து சங்கம்