கார்த்திகை தீபம் அன்று மலேசியாவில் சந்திர கிரகணம் இல்லை

15.11.2021-

கார்த்திகை தீபம் அன்று மலேசியாவில் சந்திர கிரகணம் இல்லை, ஆகவே, ஆலயங்களைத் திருக்காப்பிட அவசியம் இல்லை என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது. 

எதிர்வரும் 19.11.2021ஆம் தேதி கார்த்திகை தீபம் அன்று சந்திர கிரகணம் நிகழவிருப்பதாகவும் ஆலயங்களைத் திருக்காப்பு இட வேண்டும் என்றும் சிலர் மக்களைக் குழப்பி வருகின்றனர்.

19.11.2021-ஆம் தேதி நிகழவிருப்பது நிழல் சந்திர கிரகணம் அதுவும் அமெரிக்காவில் இரவில் தான் நிகழ்கிறது. அந்நேரத்தில் மலேசியா மற்றும் இந்தியாவில் பகல் நேரமாக இருக்கும். கிரகணத்தைப் பார்க்க முடியாது. எனவே, மலேசியாவில் கிரகணத் தோஷம் ஏற்படாது.

அதனால், யாரும் கிரகணத் தோஷ பரிகாரங்களைச் செய்யவோ அல்லது ஆலயங்களைத் திருக்காப்பிடவோ அவசியமில்லை என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.