சனிக்கிழமை அதிகாலையில் சந்திர கிரகணம்; வெள்ளியன்று கோயிலைத் திருக்காப்பிட அவசியமில்லை! மலேசிய இந்து சங்கம் அறிவிப்பு!

ஜூலை 24- எதிர்வரும் சனிக்கிழமை 28.07.2018ஆம் தேதி, நிகழவுள்ள சந்திர கிரகணத்தை ஒட்டி முதல் நாள் வெள்ளிக்கிழமை 27.07.2018ஆம் தேதியன்று கோயில்களில் திருக்காப்பு இட அவசியமில்லை என மலேசிய இந்து சங்கம் தெளிவுப்படுத்த விரும்புகிறது.

நீண்ட நேரம் நீடிக்கக் கூடிய அரிய நிகழ்வாக கருதக்கூடிய இந்த சந்திர கிரகணம் மலேசிய நேரப்படி, சனிக்கிழமை அதிகாலை 2.24 மணி முதல் காலை 6.19 மணி வரை நிகழவுள்ளது. இந்நிலையில், சந்திர கிரகண நேரத்தில் கோயில்கள் திருக்காப்பிட்டு நடை மூடப்படுவது வழக்கமானது. ஆனால், இம்முறை வரும் சந்திர கிரகணம் அதிகாலையில் தொடங்குவதால் வெள்ளிக்கிழமை இரவு பூஜையை வழக்கம் போல நடத்தலாம். இதனால் பாதிப்பு ஏதும் வராது.

அதேநேரத்தில், சனிக்கிழமை காலை 6.19 மணிக்கு சந்திர கிரகணம் முடிவடைவதால், காலை 7 மணிக்கு மேல் கோயில்களில் புண்ணியாகவாசனம் மற்றும் அபிஷேகம் செய்து வழக்கம் போல பூஜைகள் நடத்தலாம் என்பதை மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

You may also like...