சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் அமிருடின் ஷாரிக்கு மலேசிய இந்து சங்கத்தின் வாழ்த்துகள்!

ஜூன் 19- சிலாங்கூரின் புதிய மந்திரி புசாராக பொறுப்பேற்றுள்ள சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் ஷாரிக்கு மலேசிய இந்து சங்கம் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இதற்கு முன்னர் மாநிலத்தின் மந்திரி புசாராக இருந்த டத்தோஶ்ரீ அஸ்மின் அலிக்கு நன்றி கூறி கொள்ளும் அதேவேளையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள மந்திரி புசார் அமிருடின் ஷாரி சமய விவகாரங்களில் சங்கத்திடம் அணுக்கமாக செயல்படுவார் என மலேசிய இந்து சங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

நாட்டில் இந்தியர்களுக்கு தாய் சங்கமாக விளங்கும் மலேசிய இந்து சங்கத்துடன் சிலாங்கூர் மாநிலம் எப்போதும் நல்லுறவைக் கொண்டிருந்தது. இனிவரும் காலங்களில் அமிருடின் ஷாரி தலைமையில் சங்கத்துடனான உறவு மேலும் வலுப்பெறும் என இந்து சங்கம் நம்பிக்கை கொள்கிறது.

You may also like...