‘சிலாங்கூர் இந்து சங்கமா?’-எங்களுக்கு சம்பந்தமில்லை! – -மலேசிய இந்து சங்கம் விளக்கம்

மே 4- சிலாங்கூரில் ‘சிலாங்கூர் இந்து சங்கம்’ எனும் அமைப்பு ஒன்று உருவாகி இருப்பது தொடர்பில் அவ்வமைப்புக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மலேசிய இந்து சங்கம் தெளிவுப்படுத்த விரும்புகிறது.

கடந்த சில நாட்களாக மலேசிய இந்து சங்கத்தின் உறுப்பினர்கள், தேசியத்திடம் ‘சிலாங்கூர் இந்து சங்கம்’ என்ற புதிய அமைப்பு குறித்து தொடர் கேள்விகளைக் கேட்டதை அடுத்து சங்கத்தின் உறுப்பினர்களும் மலேசிய இந்தியர்களும் தெளிவு பெறும் வகையில் இந்த அறிக்கை விடப்படுகிறது.

அரை நூற்றாண்டு காலமாக மலேசியாவில் இந்துக்களைப் பிரதிநிதிக்கும் முதன்மை இயக்கமாக ‘மலேசிய இந்து சங்கம்’ விளங்கி வருகிறது. மலேசிய இந்து சங்கத்தின் கீழ் மாநில பேரவைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட வட்டாரப் பேரவைகளும் மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றன.

இந்நிலையில், ‘சிலாங்கூர் இந்து சங்கம்’ என்ற அமைப்புக்கும் மலேசிய இந்து சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தப்பட்ட அமைப்பு தனிக்குழுவாக இயங்கி வருகிறது என்பதை தெளிவுப்படுத்த விரும்புவதாக சங்கத்தின் கௌரவ பொதுச் செயலாளர் த.கணேசன் கூறினார்.