சுதந்திரத் தினத்தில் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்வோம்- மலேசிய இந்து சங்கம் அறிவுறுத்து!

ஆகஸ்டு 25 –  மலேசியாவின் 61வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படவேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

எதிர்வரும் 31 ஆகஸ்டு 2018 வெள்ளிக்கிழமை, நாட்டின் 61வது சுதந்திரத் தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், மலேசிய இந்து சங்க வட்டார மற்றும் மாநில பேரவைகள் ஆலயங்களுடன் இணைந்து இந்த சிறப்பு பிரார்த்தனையை ஏற்பாடு செய்ய வேண்டும் என சங்கம் கேட்டுக் கொள்கிறது.

உலகத்தின் அசுர வளர்ச்சியில் நமது மலேசிய திருநாடும் வெற்றி நடைப் போட வேண்டும் என்பதோடு, பல்வேறு இனங்கள் ஒன்று சேர்ந்து வேற்றுமையிலும் ஒற்றுமைக் காண புரிந்துணர்வும் நல்லிணக்கமும் மேம்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கும் வகையில் சுதந்திரத் தின சிறப்பு பிரார்த்தனைகள் நடத்த வேண்டும் என மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் கேட்டுக் கொண்டார்.

You may also like...