செபராங் ஜெயா வட்டாரப் பேரவையின் பெண்கள் மேம்பாட்டுப் பட்டறை!

மலேசிய இந்து சங்கம் செபராங் ஜெயா வட்டாரப்பேரவையின் ஏற்பாட்டில் “பெண்களுக்கான சுய மேம்பாடும் சிறு தொழில் நிர்வாகமும்” நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. கடந்த 22/04/2018 ஞாயிற்றுக்கிழமை, பிறை ஜாலான் பாருஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் 56 பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.