தஞ்சோங் ரம்புதான் வட்டாரப் பேரவையின் ‘விநாயகர் தத்துவம்’ சமயப் போதனை!

பேராக், தஞ்சோங் ரம்புதான் வட்டாரப் பேரவையின் ஏற்பாட்டிலான வாராந்திர சமய வகுப்பில் கடந்த வாரம் ‘விநாயகர் தத்துவம்’ எனும் தலைப்பில் போதனை நடைபெற்றது.

கடந்த 22/4/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று, அருள்மிகு சமயபுரம் மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த இந்த வகுப்பில் 38 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாலை 3 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்த இந்த வகுப்பில் பிரார்த்தனை, சமயம், திருமுறைகள், பஜனை ஆகிய தலைப்புகளிலும் வகுப்புகள் நடந்தன.

வகுப்பினை திருமதி விஜயா மற்றும் திருமதி லலிதா ஆகியோர் வழிநடத்தினர்.