தர்ப்பணத்திற்கு உகந்த ஆடி அமாவாசை தேதியும் விநாயகர் சதுர்த்தி தேதியும்

15 ஜூலை 2023-

பிறக்கின்ற ஆடி மாதத்தில் இரு அமாவாசைகள் வருகின்ற நிலையில், எந்த அமாவாசை தர்ப்பணம் செய்ய உகந்தது என்ற கேள்வி இந்துக்களுடையே எழுந்துள்ளது. அதற்கான விளக்கத்தை மலேசிய இந்து சங்கம் இங்கே தெரிவித்துக் கொள்கிறது.

திதிகளின் அடிப்படையில், பக்தர்கள் விரதம் இருக்கவும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தல் மற்றும் புண்ணியத் தலங்களில் புனித நீராடல் திவசத்திற்கும் ஆடி மாதம் 31ஆம் தேதி அதாவது 16.08.2023-ஆம் தேதி புதன்கிழமை அன்று வரும் அமாவாசையே உகந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விநாயகர் சதுர்த்திக்கான தேதி

அதேவேளையில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கான தேதியிலும் குழப்பம் ஏற்பட்டதுள்ளது. மலேசிய நேரப்படி 18.09.2023ஆம் தேதி பிற்பகல் 2.03 மணிக்கு தான் சதுர்த்தி திதி பிறப்பதினால், மலேசியாவில் 19.09.2023ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என்று மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

You may also like...