தாப்பா, ஶ்ரீ ஜெகநாதர் ஆசிரமம் கட்டுமானம் சிறப்பாக நடக்கிறது!
ஸ்ரீ ஜெகநாதர் சுவாமி ஆசியால் தற்போது ஆசிரமத்தின் கோபுர பகுதியில் concreate வேலை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மலேசியா இந்து சங்கம் தேசிய பேரவை, மாநில பேரவை மற்றும் வட்டாரப் பேரவையின் அயராத உழைப்பில் கட்டுமான வேலைகள் விறுவிறுப்போடு நடந்து வருகின்றன.
மேலும், 22.1.2019ஆம் தேதி அதாவது தைப்பூச திருநாளின் மறுநாள் சுவாமியின் 59 ஆவது குரு பூஜை சிறப்பாக நடக்கும் என்பது குறிப்பிடதக்கது.