திருக்கார்த்திகை தீபம்

05 டிசம்பர் 2022

திருச்சிற்றம்பலம்

கரு: திருக்கார்த்திகை தீபம்

வணக்கம். தீபங்களின் மாதம் என வர்ணிக்கப்படும் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீப திருநாளை நாம் நாளை 06.12.2022ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடவிருக்கிறோம். அதற்கான விவரம் பின்வருமாறு:

     கார்த்திகை நட்சத்திரம் ஆரம்பம் : நண்பகல் 12.43 மணிக்கு

     சதுர்த்தசி திதி ஆரம்பம்         : காலை 10.29 மணிக்கு

எல்லாம் வல்ல பார்வதி தேவி தவம் இருந்து சிவபெருமானின் உடலில் சரி பாதியாக இடம் பிடித்த நாளாகவும் அடி, முடி காணா வண்ணம் ஜோதி வடிவில் இறைவன் காட்சி தந்த நாளாகவும் முருகப் பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைச் சிறப்பிக்கும் விதமாக கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருநாளை மலேசிய இந்துக்கள் அனைவரும் பக்திநெறியோடு கொண்டாடி மகிழ்வோம்.

நன்றி. திருச்சிற்றம்பலம்

You may also like...