07.11.2020 –
தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டில் மீட்சிப்பெறும் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவையும் (PKPP) பல இடங்களில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு (PKPB) மற்றும் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவையும் (PKPD) அரசாங்கம் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், கடந்த 5.11.2020ஆம் தேதி இந்துக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதற்கான எஸ்.ஓ.பி விதிகளை அரசாங்கம் அறிவித்தது.
தீபாவளி அன்று (14.11.2020) மீட்சிப்பெறும் (PKPP) & நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு (PKPB) பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள ஆலயத் திறப்பு குறித்த எஸ்.ஓ.பி:
- தீபாவளி அன்று மட்டும் (14.11.2020) காலை மணி 7 முதல் நண்பகல் 12 மணி வரை ஆலயத்தை பொதுமக்களுக்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- மேற்குறிக்கப்பட்ட காலத்தில், பிரார்த்தனை 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு (ஒரு பகுதி 30 நிமிடம்), முதல் பகுதி பிரார்த்தனைக்கும் பின்னர், ஆலயம் முழுக்க கிருமி நாசினி தெளிக்கவும் ஒதுக்கப்படும். அடுத்த பகுதிகளுக்கும் இதனையே பின்பற்ற வேண்டும்.
- பிரார்த்தனைக்கான பகுதியில் (30 நிமிடம்) ஒரே நேரத்தில் அதிகப்பட்சம் 30 பக்தர்கள் மட்டுமே ஆலயத்தினுள் அனுமதிக்கப்படுவர். பக்தர்களின் எண்ணிக்கை ஆலயத்தின் கொள்ளளவை பொறுத்தும் 1 மீட்டர் தூர இடைவெளியைப் பொறுத்தும் மாறுப்படும். அரசாங்கம் விதித்த ஆலயங்களுக்கான அனைத்து எஸ்.ஓ.பிகளையும் பின்பற்ற வேண்டும்.
உதாரணம்: காலை 7 மணி முதல் 7.30 மணி வரை, ஆலயத்தில் அதிகப்பட்சம் 30 பக்தர்கள் தங்களின் தீபாவளி பிரார்த்தனையை மேற்கொள்ளலாம். பின்னர் பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, காலை 7.30 மணி முதல் 8 மணி வரை ஆலயம் முழுதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். பின்னர், காலை 8 மணி முதல் 8.30 மணி வரை அதிகப்பட்சம் 30 பக்தர்கள் தங்களின் தீபாவளி பிரார்த்தனையை மேற்கொள்ளலாம். பின்னர் பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை ஆலயம் முழுதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும். இது நண்பகல் 12 மணி வரை பின்பற்றப்பட வேண்டும்.
- முதியவர்கள், உடல்நலக்குறைவு கொண்டவர்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆலயம் செல்ல வரவேற்கப்படவில்லை.
- ஆலய நுழைவாயிலில் மைசெஜாத்ரா செயலி பதிவு அல்லது வருகையாளர் பதிவு புத்தகம் ஏற்பாடு செய்யப்பட்டு, பெயர், கைப்பேசி எண், உடல் வெப்பம் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும். பக்தர்களுக்கு இருமல், தொண்டை வலி மற்றும் சுவாசப் பிரச்சனை இருக்கிறதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும்.
- பிரசாதம் அல்லது இனிப்புகள் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். பிரார்த்தனை முடிந்தப்பின் பக்தர்கள் உடனடியாக ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும்.
தீபாவளி அன்று (14.11.2020) கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு (PKPD) பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள ஆலயத் திறப்பு குறித்த எஸ்.ஓ.பி:
- ஆலயத்தைப் பொதுமக்களுக்குத் திறக்க அனுமதி இல்லை
- தீபாவளி அன்று பிரார்த்தனைக்கு ஆலயத்தைத் திறக்க அனுமதி இல்லை. ஆலயத்தில் உள்ள குருக்கள் மட்டுமே நித்திய பூஜையை மேற்கொள்ளலாம். ஆலய நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
மீண்டும் தலைத்தூக்கி இருக்கும் கோவிட்-19 நச்சில் பெருந்தொற்று பரவலை அனைவரும் இணைந்து கட்டுப்படுத்துவோம். மலேசிய இந்து சங்கம், நாட்டில் உள்ள இந்துக்களுக்கும் இந்து ஆலயங்களுக்கும் சேவை செய்வதில் பெருமைக் கொள்வதோடு, இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் ஆலயங்களுக்கு சிறந்தவற்றை வழங்க உறுதிக் கொள்கிறது.