நீலாய் மகா மாரியம்மன் ஆலயம், சிப்பாங் வேலி தோட்ட ஆலய துப்புரவு பணியை மலேசிய இந்து சங்கத்தின் நீலாய் வட்டாரப் பேரவை உறுப்பினர்கள் மேற்கொண்டு சிறப்பாக சேவை ஆற்றினர்!
ஆலய மண்டபம், ஆலய வளாகம், சமையல் அறை ஆகிய பகுதிகளைப் பேரவையைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் சுத்தம் செய்தனர். இதற்கு பொறுப்பேற்று சேவை செய்த வட்டாரத் தலைவர் N.S.மூர்த்தி மற்றும் அவர்தம் குழுவினர்க்கும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்…
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
திருச்சிற்றம்பலம்🙏🏻