நுண்ணுயிர் கிருமிகளை அழிக்க கூடிய சக்தி வாய்ந்தது ஆலய மணி..! நித்திய பூஜையின்போது 108 முறை ஒலிக்க செய்வோம்..!

இந்து சமயம் வெறும் சமயம் மட்டுமல்ல. அது வாழ்வியல் நெறி. அன்றாடம் நாம் மேற்கொள்ளும் இந்து சமயம் சார்ந்த அனைத்து விசயங்களும் தத்துவ ரீதியானவை, அறிவியல்பூர்வமானவை. வேதங்கள் தொடங்கி ஆலய, இல்ல வழிபாடு வரை அனைத்தும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை.

அதில் குறிப்பாக ஆலய வழிப்பாட்டிலும் இல்ல வழிப்பாட்டிலும் பூஜையின்போது ஒலிக்கப்படும் மணியும் அடங்கும்.

ஆலய மணி அறிவியல் பூர்வமானதா? ஆமாம். பொதுவாகவே ஆலய மணியிலிருந்து வெளிவரும் ஓசை மனம், உடல் மற்றும் ஆன்மாவிற்கு ஆற்றல் தருவதாக அமைக்கிறது. அதையும் தாண்டி, ஆலயத்தில் பூஜைக்கு முன்னரும் பூஜையின் போதும் மணி ஒலிக்கப்படும் போது வளி மண்டலத்தில் சில அதிர்வு அலைகள் உண்டாகுகின்றன. இதனை விஞ்ஞானிகளே ஒப்புக் கொள்கின்றனர். இந்த அலையானது காற்றில் அதிக தூரம் பயணிக்க கூடியது. இதனால் காற்றில் உள்ள நுண்ணுயிரிகளும் நுண் கிருமிகளும் அழிவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் நாம் வாழும் இந்த பூமியின் சுற்றுச்சூழல் தூய்மையடைகிறது. இது இல்ல வழிபாட்டுக்கும் பொருந்தும்.

இதனால் தான், ஆலய மணி அதிர்வு அலைகளால் சுற்றுப்புறம் நேர்மறை ஆற்றல் கொண்டதாக இருப்பதாலேயே ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என சொல்லப்பட்டது.  

எனவே, கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இயற்கையையும் நம்மையும் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தினந்தோறும் நித்திய பூஜையின்போது ஆலயத்தில் ஆலய மணியையும் நம் இல்ல வழிபாட்டின் போதும் பூஜை மணியையும் 108 முறை ஒலிக்க செய்ய வேண்டும்.

You may also like...

1 Response

  1. RAMESH CHANDRARAJA says:

    Namaskaram,
    I’m Ramesh chandraraja from JENGKA

    I WOULD LIKE TO SUGGEST OUR SANGAM TO INSIST INDIAN COMMUNITY TO DO NAMA JAPAM (ISHTA DEIVAM) OR TYRYAMBAGAM MANTRA OR GAYATRI MANTRA… TOGETHER WITH PIRARTHAI(LOKA SAMASTHA SUKHINO BAVHANTHU)…SPREAD IT THRU WHATSAPP BASICALLY OR FACEBOOK(coz not everyone will open this domain)…IN A WAY TO GIVE AWAKENING THAT NOTHING IS IN OUR HAND…AVAN ARULAL AVAN THAAL VANANGGI…IN THIS CRITICAL SCENARIO..