பங்குனி பிரதோஷம்

இன்று பங்குனி பிரதோஷம். எனவே, இந்த நாளில், மாலையில் நந்திகேஸ்வரருக்கும் சிவனாருக்கும் அபிஷேக, ஆராதனைகளை காண்பது சிறப்பு. மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் கஷ்டங்கள் யாவும் கரைந்து விடும். துக்கங்கள் அனைத்தும் காணாமல் போகும் என்பது உறுதி.

திங்கட்கிழமையை சோம வாரம் என்பார்கள். சோமவாரம் என்பது சிவபெருமானுக்கு உரிய அற்புதமான நாள். பங்குனி மாதத்தில் வரும் சோம வாரத்தில், சிவ வழிபாடு செய்வது உன்னதமானது என்பார்கள்.

இன்று சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில், பங்குனி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ தினத்தில், மாலையில் சிவாலயம் செல்லுங்கள். சிவனாருக்கு வில்வமும் செவ்வரளியும் சார்த்தி வழிபடுங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும் செவ்வரளியும் சார்த்தி வழிபடுங்கள். முடிந்தால், அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள்.

You may also like...