ஏப்ரல் 9-
நாட்டில் உள்ள பல்வேறு இனங்களிடையே சமத்துவம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு நிலவும் பொருட்டு, அவை மீதான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதற்கு பிரதமர் துறை இலாகாவில் முஸ்லீம் அல்லாத சிறப்புப் பிரிவு ஒன்று அமைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியது, மலேசிய இந்து சங்கம் மற்றும் சர்வ சமய மன்றத்தின் நீண்ட கால கோரிக்கைக்கு நல்ல தீர்வு பிறக்கும் என்பதைக் காட்டுகிறது.
மலேசிய இந்து சங்கம் மற்றும் சர்வ சமய மன்றம் நீண்ட காலமாக இதுப்போன்ற மூஸ்லீம் அல்லாத சிறப்புப் பிரிவு ஒன்றினை உருவாக்கும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் கோரிக்கைக்கு செவிசாய்த்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் மலேசிய இந்து சங்கம் கூறியது.
இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என சங்கம் கேட்டுக் கொள்கிறது. மேலும், முஸ்லீம் அல்லாத சிறப்புப் பிரிவு அமைக்கப்படும்போது, இதற்கு பொறுப்பேற்கும் நபர் முஸ்லீம் அல்லாதவராக இருப்பதை உறுதிச் செய்யவேண்டும்.
மற்றும், சர்வ சமய மன்றத்துடன் கலந்துரையாடி அதன் ஆலோசனை பெற்று சிறப்புப் பிரிவு அமைக்கப்படவேண்டும் என இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
என்றும் இறைச் சேவையில்,
ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான்
தேசியத் தலைவர்,
மலேசிய இந்து சங்கம்