30 ஜூன் 2019 –
மலேசிய இந்து சங்கத்தின் 42வது தேசிய ஆண்டுப் பொதுக்கூட்டம் இன்று ஜொகூர், மாசாயில் உள்ள அருள்மிகு ராஜ காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்றது.
காலை 9 மணி தொடங்கி நடைபெற்ற ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தலைமையேற்றார். அவருடன் இந்து சங்கத்தின் 27 மத்திய செயலவையினரும் கலந்து கொண்டனர். ஏறக்குறைய 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதோடு, ஆண்டுக் கூட்டத்தின் முக்கிய அங்கமான சங்கத்தின் மத்திய செயலவைக்கான தேர்வும் இன்று நடைபெற்றது. சுழற்சி முறையில் மத்திய செயலவையினருக்கான 9 இடங்கள் காலியாகிய நிலையில், மேலும் இருவர் இராஜினாமா செய்ததால் மொத்தம் 11 இடங்களுக்கு போட்டி இருந்தது.
கடந்த 23.06.2019ஆம் தேதி நடந்த வேட்புமனு தாக்கலின் போது புதுமுகங்கள் உட்பட மொத்தம் 11 பேர் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்த நிலையில், 11 பேரின் விண்ணப்பங்களும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆகவே, 11 காலியான இடங்களுக்கு சரியாக 11 பேர் விண்ணப்பம் செய்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டதால் இம்முறை தேர்தல் நடைபெறவில்லை.
2019/2020ஆம் ஆண்டுக்கான மத்திய செயலவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்:
- தொண்டர்மாமணி சி.எம்.கோபாலன்
- தேவார நாயகம் கோ.ஷண்முகநாதன்
- சங்கபூசன் சா.மீனாட்சி
- ஶ்ரீகாசி சங்கபூசன் த.கணேசன்
- விவேக நாயகி த.கௌரி
- டத்தோ செ.மதுரை வீரன்
- திரு. மு.பாலகிருஷ்ணன்
- திரு. சு.சுப்பையா
- தொண்டர்மாமணி சு.கணேசன்
- திரு. மா.முனியாண்டி
- திரு. ரா.கருப்பையா
மேலும், சமய மற்றும் சமுதாய சேவை ஆற்றிய நால்வரைச் சிறப்பிக்கும் வகையில் சங்கத்தின் உயரிய விருதுகளான சங்கரத்னா மற்றும் சங்கபூசன் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
சங்கரத்னா விருது பெற்றவர்:
- சிவபூசகர் சண்முகம்
சங்கபூசன் விருது பெற்றவர்கள்:
- தொண்டர்மாமணி அ.கிருஷ்ணன்,
- ஶ்ரீகாசி தொண்டர்மாமணி அ.முனியன்
- திரு.பெரியசாமி
மேலும், இருவரின் சேவையைப் பாராட்டி ‘சிறந்த சேவையாளர்’ விருதும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
2019ஆம் ஆண்டுக்கான சங்க தீர்மானங்களும் அரசாங்கம் சார்ந்த தீர்மானங்களும் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
My children have participated in the Thirumurai festival organised by MHS. This is said to have been recognised by Kementerian Pendidikan Malaysia, and the certificates also do have the Kementerian logo. However, the school authorities refuse to accept it as part of the children’s kokorikulum achievement. Could you please provide to me the letter by Kementerian Pendidikan Malaysia stating that this is approved by the Education Malaysia.
Thank you sir.
Vanakam. Please contact your State or Local Council, where you received the certificate to get the letter.