
Kuala Kubu Baru welfare activity
கெர்லிங் ஆயர் பானாஸ் முதியோர் இல்லத்திற்கு மலேசிய இந்து சங்கம் கோலகுபுபாரு வட்டாரப் பேரவையினர் குளியல் துண்டு, ஆடை மற்றும் சிற்றுண்டியை சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வழங்கினர். இதில் வட்டாரப் பேரவைத் தலைவர் திரு.கலைச்செல்வன், துணைத் தலைவர் திரு.தாஸ், செயலாளர் திரு.ஸ்ரீவிக்னேஸ்வரன், பொருளாளர் திருமதி கிருஷ்ணகுமாரி, துணைப் பொருளாளர் திருமதி செண்பகவள்ளி ஆகியோருடன் தொழிலதிபர் திரு.ஜீவா கலந்து கொண்டனர்.
முதியோர் இல்லத்தில் இருப்பவர்களை நினைவில் கொண்டு உதவிகள் செய்ததற்காக வட்டாரப் பேரவைக்கு முதியோர் இல்ல செயலாளர் திரு. எஸ்.பரதன் நிர்வாக சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டார்.