மித்ரா உதவி தொகை

26.12.2020-

ஆலயங்களுக்கான மித்ராவின் உதவி தொகை தொடர்பாக முழுமையான விசயம் தெரியாமல் தானும் உளருவதோடு இந்துக்களையும் குழப்ப வேண்டாம் என மலேசிய இந்து சங்கம் அன்போடு கேட்டுக் கொள்கிறது. பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, ஆலயங்களுக்கு உதவி தொகையாக வழங்க மித்ரா ஒப்புக் கொண்ட தொகை ரிம.42 லட்சம் தான், சிலர் கூறுவது போல ரிம.50 லட்சம் அல்ல.

கடந்த 05.12.2020ஆம் தேதியே ரிம. 42 லட்சம் உதவி தொகை குறித்து பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டு விட்டது. இருப்பினும், சிலர் அதை கூட அறியாமல், விசயத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமல், இந்து சங்கத்தை குறை கூற வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே பத்திரிகை செய்தி வழங்கி வருவதால் யாருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.

இந்த உதவி தொகை கோரிக்கை மலேசிய இந்து சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ஒன்று. சிலர் கூறுவது போல அரசாங்கமே முன்வந்து கொடுத்தது அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். கடந்த ஏப்ரல் மாதமே கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், டிசம்பர் மாதம் தான் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இவ்வளவு நாள் இழுத்தடிக்கப்பட்டதற்கு ஒரு சிலரின் தேவையற்ற தலையீடு தான் காரணம். இது அவர்களின் பத்திரிகை செய்தியிலேயே பார்க்கலாம்.

உதவி தொகை வழங்குவதற்கு முன் ஆலயங்களின் சங்க பதிவிலாகா சான்றிதழும் வங்கி கணக்கு விவரங்களையும் திரட்டி தருமாறு மித்ரா கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தற்போது இந்து சங்கம் ஆலயங்களிடமிருந்து சான்றிதழ்களைப் பெறும் பணியைச் செய்து வருகிறது. ஆனால், ஆலயங்களிடமிருந்து சான்றிதழ்களைப் பெற இந்து சங்கம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் கொஞ்சம் அல்ல. சிலரின் தலையீட்டால் ஆலயத் தலைவர்கள் எது உண்மை என்று தெரியாமல் குழும்பி போயுள்ளனர்.

இன்றைய தேதி வரை ஆலய உதவி தொகை மித்ராவிடமிருந்து இந்து சங்கத்திற்கு இன்னும் கிடைக்க பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1934 ஆலயங்களுக்கு உதவி தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அதில் 310 ஆலயங்களுக்கு அரசாங்கமே நேரடியாக பணத்தை வங்கியில் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டது.

மீத 1624 ஆலயங்களின் சங்க பதிவிலாகா சான்றிதழ் திரட்டப்பட்டு மித்ராவிடம் வழங்கிய பிறகே மீத உதவி தொகை இந்து சங்கத்திடம் வழங்கப்படும். தொகை வந்த பிறகு, ஆலயங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பணம் வழங்கப்படும். அதற்கான முழு விவரமும் மித்ராவிடம் ஒப்படைக்கப்படும்.

அதேவேளையில், 1624 ஆலயங்களில் சங்க பதிவிலாகா சான்றிதழ் இல்லாத ஆலயங்கள் இருக்கும் பட்சத்தில், மீத பணம் மித்ராவிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும். எனவே, இந்த உதவி தொகை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். வேண்டுமென்றால் வழக்கறிஞரை வைத்து விசாரித்துக் கொள்ளலாம்.

ஆலயங்கள் மீது திடீர் கரிசனமும் உதவி தொகை மீது அக்கறையும் கொண்ட தலைவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுக்கோள். முடிந்தால் ஆலயங்களுக்கும் இந்துக்களும் உதவி செய்யுங்கள். இல்லையேல், களமிறங்கி வேலை செய்பவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருங்கள்.

என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW.,JMW.,AMK.,BKM.,PJK

தேசியத் தலைவர்,மலேசிய இந்து சங்கம்