மீண்டும் திறக்கப்படும் ஆலயங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டு தர விதிமுறைகள் (SOP)
நிபந்தனையுடனான நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில் மீண்டும் திறக்கப்படும் ஆலயங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டு தர விதிமுறைகள் (SOP) இங்கே வெளியிடப்பட்டுள்ளது.
திறக்கப்படும் ஆலயங்கள் ஒற்றுமைத்துறை அமைச்சு வெளியிட்ட கடுமையாக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும். இதனை அடுத்து, மலேசிய இந்து சங்கம் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்து ஆலோசித்து, ஆலயங்களைத் திறக்கும் முன் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை உள்ளடங்கிய விரிவான செயல்பாட்டு தர விதிமுறையை தயார் செய்துள்ளது. விதிமுறைகளை ஆலயங்கள் மீறினால் சம்பந்தப்பட்ட ஆலயத்தின் அனுமதி மீட்டுக் கொள்ளப்படும் என்பதை ஆலய நிர்வாகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.