முழு எம்.சி.ஓ : ஆலயங்களில் நித்திய பூஜை நடத்தலாம்; பக்தர்களுக்கு அனுமதி இல்லை

31.05.2021 –

நாளை 01.06.2021ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் முழு நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு (எம்.சி.ஓ) காலத்தில், ஆலயங்களில் நித்திய பூஜைகள் மேற்கொள்ளலாம். ஆனால், பக்தர்கள் ஆலயத்திற்கு வர அனுமதி இல்லை என்பதை மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

கோவிட்- 19 நச்சில் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இரு வாரங்கள் அமலுக்கு வரும் இந்த எம்.சி.ஓ உத்தரவு காலத்தில் ஆலயத்தின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக ஆலயப் பொறுப்பாளர்கள் மட்டும் அதிகப்பட்சம் 12 பேர் ஆலயம் செல்ல அனுமதிக்கப்படுவர். மேற்குறிப்பிட்ட இக்காலக்கட்டத்தில் ஆலயத்தில் விழாக்களை நடத்த அனுமதி இல்லை.

அதேவேளையில், இறப்பு காரியத்தில் அதிகப்பட்சம் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அதேப்போல் அஸ்தி கரைக்க 5 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி. திருச்சிற்றம்பலம்.