விவேக பாரதி – இளைஞர் முகாம்

கடந்த 23 மார்ச் 2019ஆம் தேதி நெகிரி செம்பிலானில் உள்ள போர்ட்டிக்சன் எனும் இடத்தில், விவேக பாரதி – இளைஞர் முகாம் எனும் பட்டறை, மலேசிய இந்து சங்கத்தின் தேசிய இளைஞர் பகுதியால் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த முகாமில், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், சிலாங்கூர், பேராக், பினாங்கு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களிலிருந்து 20 இளைஞர்கள் பங்கேற்றனர்.

முதல் நாளில், தேசிய இளைஞர் பகுதியின் தலைவர் விவேக நாயகன் அ.தர்மன் முகாம் குறித்தும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விளக்களித்தார். திரு.யோகேஸ்வரன் ‘மாறுவோம் மாற்றுவோம்’ எனும் இளைய தலைவர்களுக்கான ஊக்கமளிக்கும் பட்டறையை வழிநடத்தினார். அதனைத் தொடர்ந்து இளைய தலைவர்களுக்கு “Self-Pitching for Youth Leaders” எனும் அங்கம் நடந்தது.

முதல் நாள் மாலை நேரத்தில், பங்கேற்பாளர்களுக்கு குழுமுறை நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. மேலும், விவேக நாயகன் குமார் பஜனை அங்கத்தை வழிநடத்தினார்.

இரண்டாம் நாளில், மலேசிய இந்து சங்க தலைமைத்துவத்தின் கீழ் இளைஞர் நடவடிக்கைகள் எனும் தலைப்பிலான அங்கத்தை விவேக நாயகன் அ.தர்மன் வழிநடத்தினார். அங்கத்தின் இறுதியில், பங்கேற்பாளர்கள் குழு நிலையிலான பரிந்துரைகளை முன் வைத்தனர்.

மதிய உணவிற்கு பின், தேசிய துணைச் செயலாளரும் தேசிய மகளிர் பகுதி தலைவருமான விவேக நாயகி த.கௌரி, மலேசிய இந்து சங்கத்தின் தலையாயக் கொள்கை, தூரநோக்கு கொள்கை மற்றும் ஐந்து அம்ச திட்டம் ஆகியவற்றை பற்றி விளக்கமளித்தார்.

முகாமிற்கு சிறப்பு வருகையளித்த தேசியத் தலைவர் ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் சிறப்புரை ஆற்றினார். பங்கேற்ற இளைஞர்கள் தேசியத் தலைவரிடம் கேள்விகள் மற்றும் பரிந்துரைகளை முன் வைத்தனர்.

முகாமில் பங்கேற்ற 20 இளைஞர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதோடு முகாம் நடத்த ஒத்துழைப்பு வழங்கிய மலேசிய இந்து சங்க நெகிரி செம்பிலான் மாநில பேரவையின் தலைவர் தொண்டர்மாமணி முத்துசாமி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இரண்டு நாட்கள் நடந்த முகாம் தங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என பங்கேற்பாளர்கள் மனநிறைவுடன் கூறினர்.

இதே மாதிரியான இளைஞர் முகாம், அனைத்து மாநில பேரவைகளிலும் உள்ள இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றன.