ஆலயங்களுக்கு ரிம.67 மில்லியன் வழங்கியவர் பிரதமர் நஜிப்; இந்து சங்கம் விளக்கம்!

மே 7- நாட்டின் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான அரசாங்கம் மலேசிய இந்துக்களுக்கும் இந்து சமயத்திற்கும் உதவி ஏதும் செய்யவில்லை என்று கூறப்படுவதை மலேசிய இந்து சங்கம் மறுக்கிறது. பிரதமர் நஜிப் பதவி ஏற்றது முதல் இதுவரை மொத்தம் 67 மில்லியன் ரிங்கிட்டை ஆலயங்களுக்காகச் செலவிட்டிருக்கிறார் என்பதை இந்து சங்கம் நினைவுறுத்த விரும்புகிறது என அதன் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் கூறினார்.

தேர்தல் காலத்தில் தங்களின் அரசியல் லாபத்திற்காக ஒரு சிலர், பிரதமர் நஜிப் மலேசிய இந்துக்களுக்கு நல்லது ஏதும் செய்யவில்லை என பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் பிரதமராக பதவியேற்றப்பிறகு இதுவரை மலேசியாவில் உள்ள ஆலயங்களுக்கு ரிம.67,422,490.44-ஐ மானியமாக வழங்கியுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த மானியத்தின் வழி 2009 முதல் 2018ஆம் ஆண்டு வரை 2,995 ஆலயங்கள் நாடு முழுவதிலும் பயனடைந்துள்ளன என்பதை மலேசிய இந்து சங்கம் தெளிவுப்படுத்த விரும்புகிறது. இந்துக்கள் மற்றும் ஆலயங்களுக்கு அரசாங்கம் வழங்கிய உதவிகளின் முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளாமல் தங்களின் சுய ஆதாயத்திற்கு மக்களைக் குழப்புவதை சில தரப்பினர் நிறுத்தி கொள்ளவேண்டும் என இந்து சங்கம் கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் கூறினார்.

RINGKASAN PROJEK DIBAWAH

PERUNTUKAN KHAS YAB PERDANA MENTERI MELIBATKAN KUIL

KESELURUHAN PROJEK LULUS
BIL TAHUN
BIL PROJEK KOS (RM )
1 TAHUN 2009 192 2,921,500.00
2 TAHUN 2010 572 8,915,316.44
3 TAHUN 2011 472 8,489,384.00
4 TAHUN 2012 770 24,882,000.00
5 TAHUN 2013 263 5,473,200.00
6 TAHUN 2014 237 4,641,820.00
7 TAHUN 2015 210 4,827,020.00
8 TAHUN 2016 230 5,196,250.00
9 TAHUN 2017 49 2,076,000.00
JUMLAH KESELURUHAN 2,995 67,422,490.44

 

You may also like...