தமிழர் சமயம் என்று கூறி கொண்டு இந்து மதத்திற்குள் பிரிவினையை உண்டாக்காதீர்- டத்தோ மோகன் ஷான் அறிவுறுத்து!

ஜூலை 11- தமிழர் சமயம் என்று கூறி கொண்டு இந்து சமய வழிப்பாட்டினை இழிவுப்படுத்துவதை மலேசிய இந்து சங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

சமயக் காலங்களில் மலேசிய இந்தியர்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்கும் வகையில், தமிழர் சமயம் என்ற பெயரில் சைவ சமயத்தை முன்னிருத்தி மற்ற பிரிவினர்களை இழிவுப்படுத்தி பேசுவதை, தாங்கள் தமிழர் சமயம் என்று கூறிக் கொண்டும் புலம்பி கொண்டும் இருக்கும் தரப்பினர் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். சனாதன தர்மத்தைச் சரிவர புரிந்து கொள்ளாமல் தமிழர் சமயம் வேறு இந்து சமயம் வேறு என்று கூறி மலேசிய இந்தியர்களிடையே இவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தங்களைச் சமய இயக்கங்கள் என்று அடையாளப்படுத்தி கொள்ளும் சைவ நற்பணி மன்றம், சைவ சமய பேரவை மற்றும் தமிழர் இயக்கங்கள், இந்துக்களை இழிவுப்படுத்தியும் குருமார்களையும் அர்ச்சகர்களையும் குறைக்கூறி கொண்டும், தமிழை முன்னிருத்தி பேச சமஸ்கிருத மந்திரங்களை பின்தள்ளி குறைக்கூறுவதையும் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.

அர்த்தமற்ற பேச்சுகள் மூலம் இந்தியர்களிடம் பிரிவினைகளை உருவாக்கி பிரித்து ஆளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பேரவைகளைக் கண்டு மலேசிய இந்து அமைப்புகள் பொறுமையாக இருக்காது என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக் இந்து சமயத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார் என்றுக் கூறி, அவரை இந்த நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் நாம், இதுப் போன்று இந்து சமயத்தை இழிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்படுவோரை என்ன செய்வது?

இவர்கள் இம்மாதியான செயல்களைத் தொடர்ந்து செய்தால் மலேசிய இந்து சங்கம் இவர்கள் மீதும் இவர்களின் இயக்கத்தின் மீதும் சம்பந்தப்பட்ட இலாகாவில் புகார் செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவர்கள் சைவ சமயத்தைப் பெருமைப் படுத்தி பேசுவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், சைவ அடிப்படையில் சிவனைத் தவிர மற்ற வழிப்பாடுகள் யாவும் சிறு தெய்வ வழிபாடு என்று கூறுவதும் ஆலயங்களில் தமிழ் தவிர சமஸ்கிருத மந்திரங்களை ஓதக் கூடாது என்று கூறுவதும் தண்டிக்கப்பட வேண்டிய விசயமாகும் என்பதைக் கூறிக் கொள்கிறோம்.

You may also like...

5 Responses

 1. முபெவே தமிழகரன் says:

  சனாதனம் தமிழர்களுக்கான மதம் இல்லை என்று நாங்கள் உங்களுடன் நேரடி விவாதத்திற்கு வரத் தயார், நீங்கள் தயாரா?

  • Ranee Narendranath says:

   வணக்கம். விரைவில் எமது இந்து சமய மாநாடு நடைப்பெரும். அதில் கலந்துக்கொண்டு தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.

 2. chandra raj says:

  Mr Shan is making spectacularly silly comments here. Does he even what Sanatan Dharma? Does he its origin and development? I am 100% sure he doesn’t. His comments clearly proves it. Although I have issues with Saivism, it is much rational and logical than Sanatan Dharma. Tamil should be proud and learn about Saivism and not Sanatan Dharma. I challenge him to reply to this comment of mine so that we can engage in a discussion. Will he?

  • Ranee Narendranath says:

   Datuk Mohan Shan, the National President of MHS is only voicing the stand of Hindu scholars from the Hindu Advisory Board and not merely giving his personal thoughts on the matter. We can assure you that you are free to come to prove your views to the Hindu scholars.

 3. மதமாறியஇந்துக்கள் முந்தைய இந்துபெயரில் ஒளிந்துகொண்டு சைவம் வைணவம் என்று கூறிக்கொண்டும் பலமாற்று மதத்தினர்

  அரைகுறையானஇந்துமதபுராணங்களை
  தெரிந்துகொண்டு வேதங்களை ஆரியன்/திராவிடன் சிறுதெய்வ வழிபாடு /பெரும்தெய்வவழிபாடு
  என்றும் வைனவமேபெறியது சிலர்
  சைவமே சிறந்தது என்றும்
  தமிழேசிறந்தது சமஸ்கிருதம் பார்பர்

  மொழியென்றும் சூழ்ச்சிகளின் பின்னணியில் சூழன்டு கொண்டும்
  பலர் அதில் அடிமையாகி தன் சொந்த மதத்தையோ வெறுக்கும் அளவுக்கு
  இந்துக்களை மாற்று மதத்தினர்
  பணம் உதவி என்ற பெயரில் நடுநிலை
  இந்துக்கள் என்ற எண்ணிக்கையில்
  கிருத்துவர்களின் அடிமைகளாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்