கோவிட் -19 தொடர்பில் ஆலயங்களுக்கு முக்கிய அறிவிப்பு

17.03.2020

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் (கோவிட் -19) நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், நாட்டு பாதுகாப்பு மன்றம் (MAJLIS KESELAMATAN NEGARA) மற்றும் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் அவர்கள் நேற்று (16.03.2020) செய்த அறிவிப்பின் அடிப்படையில், எதிர்வரும் 18.03.2020 முதல் 31.03.2020 வரை அனைத்து வழிப்பாட்டு தளங்களும் குறிப்பாக இந்து ஆலயங்கள் மூடப்பட வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

  1. ஆனால், ஆலயத்தில் உள்ள குருக்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் நடைமுறையில் உள்ள நித்திய பூஜையை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இந்த நித்திய பூஜையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
  • மேற்குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் குறிப்பாக கும்பாபிஷேகம், வருடாந்திர திருவிழா, சிறப்பு பூஜைகள், உபயங்கள், திருமண வைபவம் போன்ற சுபகாரியங்கள் மற்றும் மற்ற அனைத்து நிகழ்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேற்கண்ட அனைத்து விதிமுறைகளும் நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதியும் கோவிட் -19 நோய் மக்களிடையே மேலும் பரவி விடாமல் இருக்கவும், சட்டவிதியின்படி நம் நாட்டு அரசாங்கம் எடுத்த இந்த முடிவிற்கு நாம் அனைவரும் கட்டுப்பட வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

என்றும் இறைச் சேவையில்,

ஶ்ரீகாசி டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் PMW., JMW., AMK., BKM., PJK

தேசியத் தலைவர், மலேசிய இந்து சங்கம்

You may also like...