எம்.சி.ஓ 3.0 : ஆலயத் திறப்பு குறித்த புதிய செயல்பாட்டு தர விதிமுறை (எஸ்.ஓ.பி)

26.05.2021-

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 நச்சில் பெருந்தொற்று எண்ணிக்கை காரணத்தால் புதிய நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு 3.0 விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலயங்களுக்கு பக்தர்கள் செல்ல புதிய செயல்பாட்டு தர விதிமுறைகளை (எஸ்.ஓ.பி) தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு 25.05.2021ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஆலயங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் பின்வருமாறு:

அ) காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை

ஆ) மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

ஆலயங்களில் அனுமதிக்கப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

அ) பெரிய ஆலயம்:  ஒரு நேரத்தில் 12 பேர் (பொறுப்பாளர்கள் உட்பட)

ஆ) சிறிய ஆலயம்:  ஒரு நேரத்தில் மூன்று (3) பேர் (பொறுப்பாளர்கள் உட்பட)

மேலும், ஒவ்வொரு முறையும் பக்தர்கள் வெளியேறியப் பிறகு ஆலயத்தைச் சுத்தம் செய்து (கிருமி நாசினி தெளித்து) பின்னர் அடுத்த பக்தர்களை அனுமதிக்க வேண்டும். ஆலயத்தில் மைசெஜாத்ரா செயலி அல்லது வருகை பதிவு புத்தகம், முகக்கவரி, கைத்தூய்மி பயன்பாடு, ஒரு மீட்டர் தூர இடைவெளி, ஆலயத்தை தூய்மை செய்தல் போன்ற இதர செயல்பாட்டு தர விதிமுறைகளை (எஸ்.ஓ.பி) கட்டாயம் பின்பற்றப்படுவதை ஆலய நிர்வாகங்கள் உறுதிச் செய்ய வேண்டும்.

நன்றி.

You may also like...