2022ஆம் ஆண்டுக்கான திருமுறையும் அதற்கான பாடல்களும்

வணக்கம். தங்களை இக்கடிதத்தின் வழி சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நமது சங்கத்தின் தேசிய நிகழ்வான தேசியத் திருமுறை ஓதும் விழா இவ்வருடமும் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த 26.02.2022ஆம் தேதி நடந்த மத்திய செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இவ்வருட (2022) போட்டிக்கு 2020ஆம் ஆண்டு போட்டிக்கான பாடல்களையே மீண்டும் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 2020ஆம் ஆண்டுக்கான புத்தகத்தை பங்கேற்பாளர்கள் பயன்படுத்தலாம். அதில் இடம்பெற்றுள்ள வயது மற்றும் ஆண்டுக்கான விவரங்கள் மட்டுமே மாறுப்படும். மாற்றத்திற்குரிய விவர அட்டவணை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் திருமுறை ஓதும் போட்டியில் அனைத்து பிரிவிற்கும் போட்டி நடக்கும் என்பதோடு இம்முறை போட்டிகள் அனைத்தும் நேர்முகமாக நடக்கும் (இயங்கலையில் அல்ல) என்பதும் குறிப்பிடத்தக்கது. வட்டார ரீதியிலான போட்டிகள் ஜூன் மாதத்தில் தொடங்கலாம். மாநில மற்றும் தேசிய நிலையிலான போட்டியின் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் இறைச் சேவையில்,

விவேக நாயகி த.கௌரி PSI

தேசியக் கௌ. பொதுச் செயலாளர்

மலேசிய இந்து சங்கம்