CMCO காலத்தில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்ட ஆலயங்களின் பட்டியல்

எதிர்வரும் 10 ஜூன் 2020ஆம் தேதி தொடங்கி பச்சை மண்டலங்களில் உள்ள இந்து ஆலயங்கள் உட்பட முஸ்லீம் அல்லாத வழிப்பாட்டுத் தளங்களை மீண்டும் திறப்பது குறித்து கடந்த 21 மே 2020 ஒற்றுமைத்துறை அமைச்சு பத்திரிகை செய்தியை வெளியிட்டது. இந்த முடிவானது அன்றைய தினம் நடந்த சிறப்பு அமைச்சர்கள் குழு சந்திப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

முஸ்லீம் அல்லாத வழிப்பாட்டுத் தளங்கள் மீண்டும் திறப்பது மீதான கலந்துரையாடலில் ஈடுப்பட்டு அனுமதி பெற முயற்சி செய்த ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஹலிமா சாடிக் அவர்களுக்கு மலேசிய இந்து சங்கம் தனது மனமார்ந்த நன்றினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நேற்று அறிவிக்கப்பட்டது போல், பச்சை மண்டலத்தில் உள்ள மொத்தம் 84 இந்து ஆலயங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட ஆலயங்களின் பட்டியலை மலேசிய இந்து சங்கம் இங்கே வெளியிடுகிறது.