Religious Education for Aspiring Archagars

December 2018 – Malaysia Hindu Sangam Johor has organised a 7-days Religious Education for aspiring Archagars. 

The programme was held from 9 to 16 December at Arulmigu Sri Maha Mariamman Alayam, Kulai. 

It is a joint effort of MHS Johor with Malaysia Archagar Sangam. 

ஜொகூர் மாநில அர்ச்சகர் சங்கத் தலைவர் சிவஸ்ரீ குஞ்சுக்கண்ணன் குருக்கள் மற்றும் ஜொகூர் மாநில மலேசிய இந்து சங்கத் தலைவர் உயர்திரு காசி சங்கரத்னா இராமகிருஷ்ணன் அவர்களின் நல்லாசியுடன் ஜொகூர் மாநில அர்ச்சகர் சங்கம், மலேசிய இந்து சங்கம் ஜொகூர் மாநிலம் மற்றும் சமயப் பிரிவு இணைந்து மாணவர்களுக்கு சமயப் பயிற்சி முகாம் கூலாய் தான்யோக் பாங் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் டிசம்பர் 9-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை முழு நேர சமயப் பயிற்சி வழங்கப்பட்டது.

வளர்ந்து வரும் நம் மாணவர்களுக்கு அடிப்படை சமய அறிவுடன் வீட்டில் எப்படி பூஜை செய்வது மற்றும் ஆலயத்தில் எப்படி இறைவனை வணங்குவது என்பதுடன் அவர்களின் ஆத்ம பலனை எப்படி உயர்த்திக்கொள்ள முடியும் என்பன போன்ற பல சமயப் பயிற்சிகள் 7 நாட்களாக பலதரப்பட்ட சமய அறிஞர்கள் மூலம் வழங்கப்பட்டன.

மாணவர்களும் சமய அறிவு பெற்று சிறந்த மனிதர்களாக உருவாக இந்த சமயப் பயிற்சி முகாம் ஒரு சான்றாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

வாழ்க சமயம்…. வளர்க சமுதாயம்
திருச்சிற்றம்பலம்.