EZHUCHIPAADAL – எழுச்சிப்பாடல்
இந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்
பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்!
எந்த முறையும் இதற்கு ஈடு இல்லை எண்னுவோம்!
முந்து புகழ் இந்து தர்மம் முழங்கச் செய்திடுவோம்!
இந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்
பந்தத்தோடு இணக்கமாக வாழ்ந்து காட்டுவோம்!
ஒன்று சேருவோம்! ஒன்று சேருவோம்!
இந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்!
ஆதி ஆதி காலம் தொட்டு வந்த மதமிது
ஆதி மூல நாயகனைக் கண்ட மதமிது
ஓதி ஓதி உண்மைதனை உரைத்த மதமிது
நீதி தேவன் கோவில் கொண்டு நிலைத்த மதமிது
ஒன்று சேருவோம்! ஒன்று சேருவோம்!
இந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்!
அன்பு வழி காட்டுவதும் இந்து தர்மமே
இன்ப நிலை கூட்டுவதும் இந்து தர்மமே
முன்பு உலகை உயர்த்தியதும் இந்து தர்மமே
துன்ப நிலை நீக்கியதும் இந்து தர்மமே
ஒன்று சேருவோம்! ஒன்று சேருவோம்!
இந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்!
பெற்ற தாயைப் பிறந்த மக்கள் வெறுப்பது முண்டோ
உற்ற தந்தை இல்லையென்று உரைப்பவருண்டோ
முற்றும் உணர்ந்து இந்து தர்ம முறையறியாமல்
தெற்றுக் கூறும் தீயர்மனம் திருந்தச் செய்திடுவோம்
ஒன்று சேருவோம்! ஒன்று சேருவோம்!
இந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்!
உனது மதம் உனது வேதம் உரிமை காக்க வா!
தனது மானம் தனது மதம் தர்மம் காக்க வா!
இனிய மதம் எங்கள் மதம் என்று சொல்ல வா!
புனித மதம் எங்கள் மதம் என்று புகழ வா!
ஒன்று சேருவோம்! ஒன்று சேருவோம்!
இந்து சமய மக்களெல்லாம் ஒன்று சேருவோம்!
இந்து சமயம் வாழ்க! இந்து சமயம் வாழ்க! இந்து சமயம் வாழ்க!