Dharma Madani T&C and Forms

Program Dharma Madani
முக்கிய அறிவிப்பு

மதிப்பிற்குரிய ஆலயத் தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம்!

தர்மா மடானி திட்டத்தின் கீழ், “இந்து வழிபாட்டு தளங்கள் சமூக சேவை மையமாக்குதல்” என்ற புதிய நடவடிக்கைத் திட்டத்தின் குறிக்கோள் மற்றும் அதன் செயல் திட்டத்தை உங்களிடம் அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

முக்கிய குறிக்கோள்கள்

நமது கோவில்களை வெறும் வழிபாட்டு தளங்களாக மட்டுமின்றி, சமூகத்தின் உருமாற்றத்திற்கான சேவை மையங்களாகவும் செயல்படுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இந்த அரிய முயற்சிக்கு செயல்வடிவம் கொடுத்து மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம்  மித்ரா நிதியில் இருந்து வெ. 20 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தை  ஒற்றுமை அமைச்சு வழி நடத்துகிறது. இந்திய மக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் உள்ள 200 ஆலயங்கள் இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்படவுள்ளது. 


முதல் கட்டமாக 6 சேவைகள்:

1. ஆவணமில்லா குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்/ அடையாள அட்டை பெறும் உதவி :
கோவில்களில் உதவி மேசைகள் அமைத்து, BC/IC இல்லாத குழந்தைகளுக்கு பிறப்புப்பத்திரம் மற்றும் அடையாள அட்டை விண்ணப்பங்கள் செய்வதற்கான சேவை மற்றும் அதன் ஆவண சேகரிப்பு தொடர்பான உதவிகள் வழங்குதல்.

2. குடியுரிமை: 

மலேசியாவில் பிறந்தும் குடியுரிமை அற்றவர்களாக இருப்பவர்களுக்கு குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் அதன் ஆவண சேகரிப்பு தொடர்பான சேவைகளை வழங்குதல்.

3. கல்வி & மாணவர் ஆதரவு: 
பள்ளியை விட்டு இடையிலேயே விலகும் மாணவர்களை மீண்டும் கல்வியில் இணைப்பது, அவர்களுக்கு கோவில் வளாகத்தில் இலவச பயிற்சி வாய்ப்புகள் வழங்குதல்.

4. அரசாங்கத் தகவல் மையம் 

அரசாங்க உதவித் திட்டங்கள், விண்ணப்ப நடைமுறைகள் தொடர்பான தகவல் மையமாக கோவில்களை உருவாக்குவது, கோவில்களில் தகவல் பலகைகள் மூலம் அரசாங்க உதவிகள் பற்றிய அறிவிப்பு செய்வது.

5. சிறைவாசிகள் மறுவாழ்வு: 
சிறையில் இருந்து விடுதலையாக இருப்பவர்களுக்கும் விடுதலை ஆனவர்களுக்கும் மறுவாழ்வு மற்றும் சமூக இணைப்பு  முயற்சிகள், ஆலோசனைகள் வழங்குவதோடு, திறன் பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது.
6. இசைப் பயிற்சி:
இசைக் கற்றலின்  வழி சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தமிழ், பண்பாடு மற்றும் கலாசார அடையாளத்தை  வலுப்படுத்துவது.

எதிர்பார்க்கப்படும் பலன்கள்

  •  ஆவணமில்லா குழந்தைகளின் எண்ணிக்கை குறையும்;
  •  குடியுரிமையற்றோர் எண்ணிக்கை குறையும்;
  • பள்ளி விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும்;
  • அரசாங்கத்தின் நலத்திட்டங்களை எளிதாக மக்களுக்கு கிடைக்கப் பெறும்;
  • தவறான பாதையில் சென்று சிறைவாசிகளானவர்கள் நல்ல குடிமக்களாக சமூகத்தில் மீண்டும்  இணைக்கப்படுவர்;
  • இசை வழியே, ஒழுக்கம், ஒற்றுமை, மற்றும் பண்பாட்டுச்சிந்தனைகள் விதைக்கப்படும், வளர்க்கப்படும்.

விண்ணப்ப பாரம் 

  1. தர்மா மடானி திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்பும் ஆலயங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்யவும்
  2. பூர்த்தி செய்யப்பட்ட பாரங்கள் ஒற்றுமை அமைச்சுக்கு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதிக்குள் சேர்க்கப்படவேண்டும் என்பதால் அதற்கு ஏதுவாக அக்டோபர் மாதம் 7ஆம் தேதிக்குள் ஆலய நிர்வாகம் மலேசிய இந்து சங்கத்திடம் பூர்த்திசெய்த பாரங்களை சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்கின்றோம். 
  3. ஒற்றுமை அமைச்சு உருவாக்கியிருக்கும் Garis Panduan னை முழுமையாக படித்து அறிந்துக் கொண்டப் பிறகு பாரங்களை பூர்த்தி செய்யும்படி கேட்டுக் கொள்கின்றேன். இங்கே Garis Panduan இணைக்கப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டர்கள்

இது ஒரு சாதாரண திட்டம் அல்ல. இது இந்து சமூகம் புதிய பாதையில் முன்னேறும் ஒரு மாற்றப் பயணம். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால், கோவில்கள் வெறும் வழிபாட்டு இல்லமாக இல்லாமல், சமூக நீதியின், கல்வியின், மறுவாழ்வின், கலை மற்றும் கலாசாரத்தின் மையமாக விளங்கும். ஆகவே, இந்த முயற்சியில் மக்கள் சேவையே மகேசன் சேவையே என்ற உணர்வோடு சேவையாற்ற விரும்பும் ஆலயங்கள் பங்குபெறும்படி அழைக்கின்றோம். 

Borang Permohonan Dharma Madani:

 * Borang Permohonan

 Garis Panduan Dharma Madani:

 * Garisan Panduan

E-mail Borang Permohonan Kepada:
urusetiadharmamadani@gmail.com
CC Kepada:
saraswathykandasami@perpaduan.gov.my

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *